சோஷியல் மீடியா ட்ரெண்டை மாற்றப்போகும் அடுத்த அப்ளிகேஷன் ஃபேஸ்அப் தான்! FaceApp

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற அத்தனை சோஷியல் மீடியாக்களிலும் ஃபேஸ்அப் (FaceApp) அப்ளிகேஷன் பற்றிய போஸ்ட்களை சமீபத்தில் பார்த்திருக்கலாம். பிரிஸ்மா, டப்ஷ்மாஸ், மியூசிக்கலி போன்ற அப்ளிகேஷன்கள் சோஷியல் மீடியாக்களின் ட்ரெண்ட்டையே மாற்றியது. ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு காலகட்டத்தில் இதுபோன்று ஏதாவது ஓர் அப்ளிகேஷன் ட்ரெண்ட்டில் இருப்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக் ட்ரெண்ட்டில் இருக்கும் அப்ளிகேஷன் தான் இந்த 'ஃபேஸ்அப்'.


Download FaceApp For Free
Download FaceApp For Free

புகைப்படங்களை மார்ஃபிங் செய்யும் அப்ளிகேஷனான இது, சமீபத்தில் தான் அறிமுகமானது. ஆனால், அறிமுகமான உடனேயே இதில் உள்ள 'ஹாட்' ஃபில்டர் இனவெறியைத் தூண்டும் விதமாக இருப்பதாக, உலகம் முழுவதிலும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து உடனடியாக மன்னிப்பு கேட்டதோட்டு, அந்த ஃபில்டரின் பெயரை 'ஸ்பார்க்' என மாற்றியது ஃபேஸ்அப் நிறுவனம். ஆனால், இதை எல்லாம் தாண்டி தற்போது நெட்டிசன்களின் ஃபேவரிட் அப்ளிகேஷன்களில் ஒன்றாக ஃபேஸ்அப் மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் ஃபேஸ்அப் அப்ளிகேஷன், பலவிதமான ஃபில்டர்கள் மூலம் புகைப்படத்தை அழகாக்கிக் காட்டுகிறது.


இன்னும் நிறைய பிரபலபங்களை இங்க சிரிக்க வச்சிருக்கோம்

ஃபில்டர்கள் :

ஸ்மைல் - சிரிப்பு கிலோ எவ்வளவு எனக்கேட்கும் நரசிம்ம ராவ் போன்ற நபர்களின் புகைப்படங்களிலும் சிரிப்பை ஏற்படுத்தும் ஃபில்டர் இது.
ஸ்மைல் 2 - மில்லி மீட்டர் அளவில் சிரிக்கும் நபர்களின் புகைப்படங்களையும், நடிகை கீர்த்தி சுரேஷ் போன்று வாய்விட்டு சிரிக்க வைத்து நோய் விட்டுப்போக வைக்கக்கூடிய ஃபில்டர் இது.
ஸ்பார்க் - புகைப்படங்களுக்குப் பவுடர் அடித்து அழகாக்கி, டல் திவ்யாவையும் தூள் திவ்யாவாக மாற்றிக்காட்டும் ஃபில்டர் இது.
ஓல்ட் - இருபது வருஷம் கழிச்சு ஒருத்தர் எங்க, எப்படி இருப்பார்னு நமக்குத் தெரியாது. ஆனா அவர் வயசானா இப்படி இருக்கலாம்னு குத்துமதிப்பா காட்டக்கூடிய ஆப்ஷன் இது. இந்த ஃபில்டர் முகத்தில் வயதை ஏற்றிக் காட்டுகிறது.
யங் - இதுவரை எத்தனை ஃபில்டர்களைப் போட்டுப்பார்த்தும் முகம் முப்பது வயதுக்கு மேல் தெரிகிறதென்று நினைப்பவர்களுக்கான ஃபில்டர் இது. சில நொடிகளில் புகைப்படத்தில் உள்ளவரை இளமையாக்கிக் காட்டுகிறது.
ஃபீமேல் (Female) - அப்லோடு செய்யப்படும் புகைப்படத்தில் உள்ளவர் எதிர் பாலினத்தவராக இருந்தால் எப்படித் தோற்றமளிப்பார் என்பதையும் இந்த ஃபில்டர் எடிட் செய்து தருகிறது.

புகைப்படத்தை எடிட் செய்வதற்காகத் தேர்வு செய்ததும், அதை ப்ராசஸ் செய்வதற்காக தொடக்கத்தில் மட்டும் கொஞ்சம் நேரமெடுக்கிறது. அதற்குள் நியூரல் முறையில் புகைப்படத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து, எடிட் செய்வதற்கு வசதியாக புகைப்படத்தில் இருக்கும் முகத்தைப் பதிவு செய்துகொள்கிறது.

கேலரியில் இருக்கும் புகைப்படத்தையோ அல்லது கேமரா மூலமாக நேரடியாக எடுக்கும் புகைப்படத்தையோ இந்த அப்ளிகேஷன் மூலமாகப் புகைப்படத்தை எடிட் செய்யலாம்.

இதன் செயற்கை நுண்ணறிவானது புகைப்படங்களை ஆய்வு செய்து, முகம் தெரியக்கூடிய புகைப்படங்களை மட்டுமே கேலரியில் வடிகட்டிக் காண்பிக்கிறது.

இந்த அப்ளிகேஷனின் ஃப்ரீ வெர்சனில் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் அனைத்திலும், FaceApp என்று தனது வாட்டர்மார்க் பதிவு செய்யப்படுகிறது. மேலும், ஃப்ரீ வெர்சனில் விளம்பரங்களும் அவ்வப்போது காண்பிக்கப்படுகிறது.

வாட்டர்மார்க் மற்றும் விளம்பரங்கள் இல்லாத வெர்சன் வேண்டுமென நினைப்பவர்கள், ரூ.260 செலுத்தி Pro வெர்சனை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

அப்லோடு செய்யப்படும் ஒவ்வொரு புகைப்படத்தையும், ஃபேஸ்அப் தனது சர்வரில் சேமிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே ப்ரைவசி முக்கியம் என நினைப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் புகைப்படங்களுக்கு ஆதரவு அதிகம் இருப்பதால், மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் கேமரா தரத்தை அதிகரித்து விற்றுவருகிறார்கள். புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த அப்ளிகேஷனும் நெட்டிசன்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆகும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை.

FaceApp ஐ நேரடியாக PLAYSTORE இல் இருந்து  டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

பிடித்திருந்தால் லைக் செய்யவும்


IMO ஆப் பயன்படுத்துகிறீர்களா  நீங்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு - உஷார் பதிவு

FaceApp became the new trend in social media sites like facebook,twitter,whatsapp etc...
Download faceapp,faceapp app download,faceapp apk download,faceapp download direct from playstore,faceapp details in tamil,faceapp benefits in tamil full details.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.