12 மணி நேரத்தில் உருவாகிறது , ஃபானி புயல் - ஃபானி புயல்: 50 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை தாக்க வந்துள்ளது


புதுடில்லி : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஃபானி புயல் - ஃபானி புயல்: 50 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை தாக்க வந்துள்ளது...
Paani Storm News

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிப்பில், இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக வலுப்பெறும். இந்த புயலானது இலங்கை கடல் பகுதியில் வடமேற்காக நகரக் கூடும். ஏப்.,30 ம் தேதி மாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஃபானி புயல் நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு தென்கிழக்கே 1210 கி.மீ.,ல் நிலை கொண்டுள்ளது.

ஏப்.,30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் பரவலமாக கனமழை பெய்யக் கூடும். ஏப்.,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் கேரளாவில் கனமழை பெய்யும். ஏப்.,30 ஆந்திர தெற்கு கடலோர பகுதிகளிலும், மே 1 ம் தேதி ஆந்திர கடலோர பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க - உலகையே மிரளவைக்கும் திருநள்ளாறு கோவில் அதிசயம், அசரவைக்கும் அறிவியல் மர்மங்கள், படித்தாலே புண்ணியம் கிடைக்கும்

50 ரூபாய் இலவச ரீசார்ஜ் பெறுங்கள் 

Tags - Paani Puyal News, Fani Storm Updates, Paani Puyal News In Tamil, Paani Storm Forming After 50 Years To Attack Tamilnadu

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.