இடைப்பாடி முதல்வரானது எப்படி? கூவத்தூரில் நடந்த ரகசிய பேச்சு

Edappadi Palanisamy As Cm
Edappadi Palanisamy As Cm
ஆட்சியை தக்க வைப்பதற்கான செலவுகளை ஏற்பதாக, இடைப்பாடி பழனிசாமி தரப்பினர், சசிகலாவுக்கு வாக்குறுதி அளித்ததால் தான், அவரை, அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்ய, சசிகலா சம்மதம் அளித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.
பாதகமான தீர்ப்புஇதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தீர்ப்புக்கு முந்தைய நாள் இரவு, சசிகலா, கூவத்துார் சென்று, அங்கேயே தங்கினார். அப்போது இரவு, 9:00 மணிக்கு மேல், செங்கோட்டையன், இடைப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் பேசினார்.
அப்போது, தீர்ப்பு பாதகமாக வந்தால், செங்கோட்டையன், இடைப்பாடி பழனிசாமி ஆகியோரில், ஒருவரை முதல்வராக்க வேண்டும். அந்த பதவிக்கு வருபவர், எம்.எல்.ஏ.,க்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று, சசிகலா தெரிவித்துள்ளார்.

உடனே, செங்கோட்டையன் தரப்பில், 'போதிய நிதி வசதி இல்லை; யாரை அறிவிச்சாலும் ஆதரிப்போம்' என, கூறப்பட்டது.
பின், பழனிசாமி தரப்பினர், 'கட்சி உடைய கூடாது; ஆட்சி கலைய கூடாது; அதற்காக, என்ன சொன்னாலும் செய்கிறேன்' என்றனர். அதன்பின், இடைப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய, சசிகலா முடிவு எடுத்தார். அந்த விபரம், அனைத்து, எம்.எல்.ஏ.,க்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த, 14ம் தேதி உச்சநீதிமன்றம், சசிகலாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது. உடனடியாக, அன்று மதியமே, இடைப்பாடி பழனிசாமி, சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்ததை, செங்கோட்டையன்,நிருபர்களிடம் தெரிவித்தார்.
பிரச்னை விடுதியில் இருந்த, எம்.எல்.ஏ.,க்கள் அந்த விபரத்தை, முன்கூட்டியே அறிந்ததால் தான், யாரும் பிரச்னை செய்யவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் தங்கியிருந்த கூவத்துார் மற்றும் பூந்தண்டலத்தில் உள்ள விடுதிகளின் செலவையும், பழனிசாமியே ஏற்க உள்ளார்.
இதனால் தான், முதல்வர் பதவியுடன், அவர் ஏற்கனவே வகித்து வந்த, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறைகளையும் கவனிக்க, சசிகலா தரப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- தினமலர்  நிருபர் -
News Tag - How Edappadi Palanisamy Becomes Cm of Tamilnadu the real truth revealed,what happened in golden bay resort in chennai

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.